ஆலாந்துறை: விஷம் குடித்து மாணவன் தற்கொலை

57பார்த்தது
ஆலாந்துறை: விஷம் குடித்து மாணவன் தற்கொலை
கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (56) என்பவரது மகன் பிரனேஸ் (16), பிளஸ்-1 முடித்து பிளஸ்-2 செல்லவிருந்த நிலையில், கடந்த மாதம் தனது சக மாணவர் ஒருவருக்கு விளையாட்டாக தவறான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்த குறுஞ்செய்தியை அனுப்பியது பிரனேஸ் தான் என்பதை சக மாணவர் கண்டறிந்ததால், பிரனேஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த மே 31ம் தேதி, பிரனேஸ் தனது தந்தையின் வொர்க்ஷாப்பில் இருந்த பூச்சி மருந்தை அருந்தியுள்ளார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று பிரனேஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி