கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தம்மம்பதி வனப்பகுதியில் அனுமதி அளித்த எல்லையை மீறி விலை உயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 50 ஹெக்டேருக்கு ஏலம் விடப்பட்ட நிலையில், 500 ஏக்கருக்கு மேல் மரங்கள் வெட்டப்பட்டதாகவும், புலிகள் காப்பகப் பகுதிகளில் இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை இருந்தும் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்காமல் தவிர்த்ததாகவும், தமிழக அரசு இது குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.