கோவை குனியமுத்தூரில் காதல் விவகாரத்தில் சமரசம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மற்றும் விஸ்வா ஆகியோருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற சூரியாவும் தாக்கப்பட்டார். காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சஞ்சிவ், அசாருதீன், விஷ்ணு, மனோஜ்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.