கோவை: தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுவன்!

355பார்த்தது
கோயம்புத்தூர்: முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுவன் லியோனல் தாமஸுக்கு சிகிச்சை அளிக்க 1.50 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. துடியலூர் NGGO காலனியைச் சேர்ந்த அஜய் சில்வெஸ்டர் - சரண்யா தம்பதியினரின் மகனான லியோனல் தாமஸ், ஆறு மாதங்களாக வளர்ச்சிக் குறைபாடு காரணமாக பெங்களூருவில் பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்த நோய் கண்டறியப்பட்டது. இதனால் சிறுவன் உட்கார, நடக்க, மூச்சுவிட சிரமப்படுகிறான். அமெரிக்க மருத்துவமனையில் ஜீன் தெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும், இதற்கு 1.50 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தொகைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஒருமுறை ஜீன் தெரபி மருந்து அளித்தால், மாதம் ரூ. 6 லட்சம் மதிப்பிலான மருந்துகள் தேவையில்லை என்றும், இன்ஸ்டாகிராம் மற்றும் 7397504777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you