கோவை: வீட்டிற்குள் நுழைய முயன்ற 5 அடி சாரைப் பாம்பு மீட்பு

364பார்த்தது
கோவை கவுண்டம்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் நேற்று ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீள சாரைப் பாம்பு, அருகிலிருந்த பேராசிரியை வீட்டிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பைக் கண்டு அச்சமடைந்தவர்கள் அலறியதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தகவலறிந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பாம்பை பாதுகாப்பாக பிடித்து சாக்குப்பையில் அடைத்து அப்புறப்படுத்தினர். கோடை வெப்பத்தால் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகம் வருவதாக அதிகாரிகள் எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்தி