கோவை: புகையிலை விற்ற 6 பேர் கைது

66பார்த்தது
கோவை: புகையிலை விற்ற 6 பேர் கைது
கோவை சுக்ரவார்பேட்டை, சவீவன் வீதி, என். எஸ். ஆர். ரோடு, காளப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற சுஜாதா (வயது 58), ராஜி (19), ராஜூ (65), சரவணகுமார் (39), செல்வகுமார் (38), மனோஜ் (25) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று துடியலூரில் கஞ்சா விற்ற சரண் (25), கள் விற்ற கார்த்திக் (26), அருள்செல்வன் (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you