கோவை: சாக்லேட்டை காட்டி அழைத்துச் சென்று கொடூரம்.. வாக்குமூலம்

645பார்த்தது
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோர் சிறுமிக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் காட்டி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி மாயமான பிறகு, பொதுமக்களுடன் சேர்ந்து தேடியது போல நடித்ததும் அம்பலமானது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவரும் சிறுமியை பைக்கில் அழைத்து சென்றது உறுதியானது. கைது செய்யப்பட்ட பின்னர் கார்த்தி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி