கோவை: பழைய பொருள் வாங்க வந்தவர் சைக்கிள் திருட்டு!

3பார்த்தது
கோவை புறநகர் பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று பட்டப்பகலில், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தபடி குட்டி யானை வாகனத்தில் வந்த இருவர், ஆள் நடமாட்டம் குறைந்திருந்த வீட்டின் முன் நின்றிருந்த சைக்கிளை நோட்டமிட்டு, யாரும் இல்லாததை உறுதி செய்தபின் மின்னல் வேகத்தில் தூக்கி வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றனர். இதுகுறித்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், பழைய பொருள் வாங்க வந்தவர்களே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அப்பகுதி மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி