கோவை: கொடிசியாவில் வேளாண் மாநாடு -செய்தியாளர் சந்திப்பு

1பார்த்தது
கோவை: கொடிசியாவில் வேளாண் மாநாடு -செய்தியாளர் சந்திப்பு
கோவை கொடிசியா வளாகத்தில் நவம்பர் 19 முதல் 21 வரை தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாள் வேளாண் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் தொடக்க நாளான நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், 50 வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி தனி கலந்துரையாடலும் நடத்த உள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you