கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகள் ஏற்கப்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.