மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வங்கி சூப்பர்வைசர் அளித்த புகாரின் பேரில், நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த கார் டிரைவர் தினேஷ் (29) ஏ.டி.எம்.மை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் போலீசார் அவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.