கோவை: முதியவரிடம் ரூ. 18 லட்சம் பறிக்க முயற்சி!

கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 65 வயது முதியவரை, பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து பேசுவதாகக் கூறி, பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் குற்றம் சாட்டினார். பின்னர், போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்த நபர், வீடியோ காலில் முதியவரையும் அவரது மனைவியையும் டிஜிட்டல் கைது செய்துவிட்டதாகவும், வீட்டிற்கு வெளியே வந்தால் சுட்டுவிடுவார்கள் என்றும் மிரட்டி, வங்கி கணக்கைச் சோதனை செய்ய ரூ. 18 லட்சத்தை குறிப்பிட்ட கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், பணம் அனுப்பும் வரை வீடியோ இணைப்பைத் துண்டிக்கக் கூடாது என்றும் கட்டாயப்படுத்தினார். பயத்தில் முதியவர் தனது வங்கிக் கணக்கிலிருந்த ₹18 லட்சத்தை மர்ம நபர்களுக்கு அனுப்பினார். இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
