கோவை: அங்கன்வாடி ஊழியர்கள் - அதிகாரி மிரட்டல் ஆடியோ வெளியீடு

2பார்த்தது
கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சுல்தான்பேட்டை பகுதியில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஒருவர் எச்சரிக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக முறையில் போராடும் ஊழியர்களை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி