தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையின் சார்பில், விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) அதிகாரிகளுக்கு இன்று தேனீ வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மூத்த தளபதி சஷிரஞ்சன் மற்றும் துணை தளபதி ஹக்கீம் ஆசிப் யூசுப் தலைமையிலான குழு கலந்து கொண்டது.
பயிற்சியில், தேனீ இனங்களை அடையாளம் காணுதல், கூடுகள் கையாளுதல், ஆய்வுகள், கூடுகளை பிரித்தல் மற்றும் மதிப்பூட்டப்பட்ட தேனீப் பொருட்கள் உற்பத்தி தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது. பேராசிரியர் சாமிநாதன் பயிற்சியை வழிநடத்தினார். மேலும், தேனீ கொட்டும் அச்சத்தைக் குறைக்கும் வகையில் அவற்றை கையாளும் முறைகள் செயல்முறை விளக்கத்துடன் கற்றுத்தரப்பட்டது.