கோவை சின்னதடாகம் அருகே நேற்று நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் பரத்ராஜ் (29) என்ற இளைஞர் உயிரிழந்தார். பரத்ராஜ், நண்பர்கள் ஆதித்யா மற்றும் சங்கீதாவுடன் காரில் பயணம் செய்தபோது, தடாகம்–கணுவாய் சாலையில் காளையனூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தில் மோதியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த சங்கீதா முதலுதவிக்கு பிறகு வீடு திரும்பினார். ஆதித்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரத்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தடாகம் காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.