கோவை அருகே உள்ள வேடப்பட்டியைச் சேர்ந்த சுரஜ் ரகுமான் (வயது 20) என்பவர் நேற்று (மார்ச் 31) கோவை இடையர் வீதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடமிருந்து செல்போனைப் பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுரஜ் ரகுமான் வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.