கோவை: தென்னை நார் லாரி தீப்பற்றி எரிந்து சேதம்!

0பார்த்தது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்துப்பாளையம் பகுதியில் தென்னை நார் ஏற்றி வந்த லாரி, நேற்று மின்கம்பியில் உரசியதால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு உயிர்தப்பினார். பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். லாரி மற்றும் தென்னை நார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. நெகமம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.