கோவை உடையாம்பாளையம் ராம்கார்டன் பகுதியில், வருவாய்த்துறை அனுமதியின்றி இன்று இரண்டு மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மரங்களை வெட்டியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.