சிறுமுகை அருகே இடிடேபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மோகன்ராஜ் (25), தன் மீது பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்து போலீசார் மிரட்டியதாக வீடியோ வெளியிட்டு, வீட்டின் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமுகை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோகன்ராஜ் மீது ஏற்கனவே அடிதடி மற்றும் கஞ்சா வழக்குகள் இருந்தன.