கோவை: முன்னாள் எம். பி. கிருஷ்ணன் மறைவு -

0பார்த்தது
அதிமுகவின் மூத்த முன்னோடியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான யு. ஆர். கிருஷ்ணன் கோவையில் மறைந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ். பி. வேலுமணி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கோவை மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன், மேட்டுப்பாளையம் எம். எல். ஏ ஏ. கே. செல்வராஜ், சிங்கநல்லூர் எம். எல். ஏ கே. ஆர். ஜெயராம் உள்ளிட்டோரும் அஞ்சலி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி