கோவை பேரூர் அருகே சிவக்குமார் (53) என்பவர், டவுன் ஹால் கடைவீதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது, உதவுவது போல் நடித்து மர்ம நபர் ஒருவர் அவரது கார்டையும் ரகசிய எண்ணையும் பெற்றுக்கொண்டார். பின்னர், சிவக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 45 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அவரிடம் இருந்தது போலி கார்டு என தெரியவந்ததை அடுத்து, கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.