அன்னூர் அருகே அல்லிக்குளம் பிரிவு பகுதியில் நேற்று மாலை சத்தி நோக்கி சென்ற அரசு பஸ் மற்றும் எதிரே வந்த மினி லாரி மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சதீஷ்குமார் (25) உயிரிழந்தார். பஸ்சில் பயணித்த 10 பேர் காயமடைந்து அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.