தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. சென்னையில் சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் சாலை மறியல் போராட்டங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் தேர்வு தொடங்கிய பின்னரும் ரத்து குறித்த தகவல் தாமதமாக வந்ததால், சுமார் 20 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. பல மாதங்கள் பயிற்சி பெற்று தேர்வை எழுத வந்த மாணவர்கள், திடீர் ரத்து தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தனர். அடுத்த தேர்வு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர்.