குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தேர்வுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்குகின்றன. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். கலந்து கொள்ள விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.