கோவை மாவட்டம் சூலூர் அருகே நாகமநாயக்கன்பாளையத்தில் கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடிந்தது. லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்த் (58) மற்றும் ஓட்டல் அதிபர் திலீபன் (36) ஒரே பெண்ணுடன் தொடர்பில் இருந்தனர். முன்பே தகராறு ஏற்பட்ட நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த பிரேம் ஆனந்த் அதிகாலையில் பெண்ணின் வீட்டிற்கு சென்று திலீபனை கத்தியால் குத்தி கழுத்தறுத்து கொலை செய்தார். பெண்ணும் காயமடைந்தார். பின்னர் கியாஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்துத் தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.