கோவை: அவமானப்படுத்திய டீச்சர்ஸ்.. மாணவி தற்கொலை

3பார்த்தது
கோவை: அவமானப்படுத்திய டீச்சர்ஸ்.. மாணவி தற்கொலை
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவி, சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் அடித்தும், அவமானப்படுத்தியும் துன்புறுத்தியதாகவும், பெற்றோரிடம் தவறாகச் சொல்லிவிடுவார்கள் என்ற பயத்திலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக மரண வாக்குமூலம் அளித்துள்ளார். தீக்குளித்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு (நவம்பர் 19) உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.