கோவை நகைக் கடையில் இருந்து ரூ. 41 லட்சம் பெற்றுக்கொண்டு கேரளாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த ஊழியரை வாளையாறு எல்லை அருகே காரில் வந்த மர்ம நபர்கள் தாக்கி பணத்தை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக கே.ஜி. சாவடி போலீஸார் விசாரணை நடத்தி, காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த நிதின், ஸ்ரீகுமார், சுதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கமும், பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.