கோயம்புத்தூர் மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நவம்பர் 24 முதல் 30 வரை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோர் கொங்கு மண்டல கூடைப்பந்து போட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் அணிகள் பங்கேற்றன. ஆர்த்தோ-ஒன் எலும்பியல் சிறப்பு மையம் நடத்திய இந்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை டாக்டர் டேவிட் ஏ. ராஜன் தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோவை காவல் துணை ஆணையர் திவ்யா கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சிறப்பு விருதுகளை நேற்று வழங்கி கௌரவித்தார். உடற்பயிற்சி, குழுப்பணி மற்றும் தன்னம்பிக்கையுடன் முன்னேற மாணவர்களை ஊக்குவித்தார்.