கோவை: விடுதியில் அமைச்சர் வன்னியரசு ஆய்வு!

0பார்த்தது
கோவை: விடுதியில் அமைச்சர் வன்னியரசு ஆய்வு!
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று கோவை நெசவாளர் காலனியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியை ஆய்வு செய்தார். உணவின் தரம் குறித்த புகாரைத் தொடர்ந்து மாணவிகளிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்த அவர், விடுதிக்கு பேருந்து வசதி மற்றும் அருகிலுள்ள மதுக்கடையை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தரமற்ற உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவிகளின் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்த அரசு உறுதியாக செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி