கோவை: தேசிய கோ கேம் போட்டி - மாணவர்கள் தங்கம் குவித்து சாதனை

0பார்த்தது
ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கோ கேம் போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்று, 13 தங்கப் பதக்கங்களை வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். உலகளவில் பிரபலமான இந்த யுக்தி விளையாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் பங்கேற்ற கோவை மாணவர்கள், இறுதிப் போட்டிகளில் ஆந்திரா, ஒடிசா மாநில வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றனர். பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாணவர்களை ஆசிரியர்கள், சக மாணவர்கள் நேற்று பாராட்டி வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி