கோவை: கமல் பேசியது புரியாததால் மக்கள் நிராகரித்தனர் – வானதி

3பார்த்தது
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம். எல். ஏ. வானதி சீனிவாசன், அ. தி. மு. க. –பா. ஜ. க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். தாம் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது கட்சி தலைமையால் தீர்மானிக்கப்படும் என்றார். மேலும், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறினார். நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்ற பேச்சு புரியவில்லை என்றும், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தோல்வியடைந்துவிட்டதாகவும் விமர்சித்தார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி