கோவை: காவல்துறை எப்போதும் துணை - ஐஜி ரம்யா பாரதி

571பார்த்தது
கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை கண்ணம்பாளையத்தில் அமைச்சர் விக்னேஷ் மற்றும் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். உதவி கேட்க தயங்க வேண்டாம்; காவல்துறை எப்போதும் துணையாக இருக்கும் என ஐஜி உறுதியளித்தார். தொடர்ந்து அழுததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயாருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்க அதிகாரிகளுக்கு ஐஜி உத்தரவிட்டார். அவரது மனிதநேய செயலுக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி