கோவை காந்திபுரம் மத்திய சிறையில், கலவரம் செய்ய திட்டமிட்டு இரும்புத் தட்டால் ஆயுதம் தயாரித்து மறைத்து வைத்திருந்த 2 கைதிகளை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறை வார்டன் சிவராஜன் நடத்திய சோதனையில், மெயின் கேட் அருகே 1.5 மீட்டர் நீள இரும்புத் தட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ரத்தினபுரி கணேஷ் நகரைச் சேர்ந்த கௌதம் மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ராஜ் ஆகியோர் இந்த திட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சா வழக்கில் சிக்கியிருந்த கௌதம், சிறை அதிகாரிகளிடம் பழிவாங்கவே இந்த திட்டத்தை தீட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.