கோவை: பிரதமர் வருகை - பி. ஆர். பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு

0பார்த்தது
கோவை கொடிசியாவில் நாளை முதல் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். மதியம் 12 மணியளவில் அவர் கோவை வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். பிரதமர், இயற்கை விவசாயிகள் மற்றும் நம்மாழ்வாருடன் பணியாற்றிய விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார். இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் குறித்து விவசாயிகள் பிரதமரிடம் விளக்கவுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு இயற்கை விவசாயப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இலவச நுழைவு வழங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் 10 விவசாயிகளுக்கு பிரதமர் விருதுகள் வழங்க உள்ளார். இது முழுக்க முழுக்க விவசாயிகள் நடத்தும் மாநாடு என்றும், எந்த அரசியல் சார்பும் இல்லை என்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி