கோவை: தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய ஆர்பாட்டம்

0பார்த்தது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை எதிர்த்து கோஷம் எழுப்பினர். மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு ராமலிங்கம் கூறுகையில், புதிய சட்டங்கள் தொழிலாளர்களுக்கு எதிரானவை என்றும், தொழிலாளர் நிதியை மத்திய அரசு எடுத்தால் தமிழகத்தின் நிதி உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சட்டம் தொழிற்சங்க பதிவு உரிமையை குறைப்பதாகவும், பெண்கள் இரவு வேலை செய்வது தொழிலாளர் பாதுகாப்புக்கு ஆபத்தானது எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி