சிறுமுகை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதத்தில் சைல்டு ஹெல்ப் லைன் 1098-க்கு புகார் வந்ததையடுத்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 52 வயதுடைய தாத்தா முறை உறவினர் சிறுமியை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.