கோவை: குளக்கரைகளில் காதல் ஜோடிகள் அத்துமீறல்

1பார்த்தது
கோவை: குளக்கரைகளில் காதல் ஜோடிகள் அத்துமீறல்
கோவை மாநகரில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் உள்ளிட்ட குளக்கரைகள் மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கல்லூரி மாணவியிடம் நடைபெற்ற கூட்டு பலாத்காரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆள்நடமாட்டம் குறைந்த 59 இடங்களில் போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியிருந்தனர். இருப்பினும் சில இடங்களில் காதல் ஜோடிகள் தொடர்ந்து கூடுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வாலாங்குளக்கரையில் இருந்த சில ஜோடிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். சமூக ஆர்வலர்கள், இத்தகைய இடங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க, போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி