கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் ரூ. 2.50 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. காமாட்சிபுரத்தில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை பேரூராட்சி தலைவர் சந்திரன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இப்பணிகள் நிறைவு பெற்றால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து பிரச்சனை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.