கோவை: சில்லறை பெயரில் 22 ஆயிரம் ரூபாய் மோசடி

52பார்த்தது
கோவை: சில்லறை பெயரில் 22 ஆயிரம் ரூபாய் மோசடி
கோவை சாரமேடு பகுதியில் உள்ள அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், நபர் ஒருவர் சில்லறை தருவதாக கூறி 22,000 ரூபாய் பணம் பெற்று கடை ஊழியருடன் பெட்ரோல் பங்க் சென்றார். அங்கு பணியாளரை இறக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார். 

இந்த சம்பவம் கடைசியிலுள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இன்று அதிகாலை கடை உரிமையாளரின் நண்பர்களால் அந்த ஆசாமி மடக்கி பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

போலீசாரிடம் விசாரணையில், அவர் செங்கல்பட்டைச் சேர்ந்த நவாஸ் கான் (வயது 47) என்பதும், மிக்ஸி கிரைண்டர் பழுது பார்ப்பது அவரது தொழிலாகும் என்றும் தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி