கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் இன்று கலந்துகொண்டார். அங்கு மலைவாழ் மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். மக்கள் அளித்த உற்சாக வரவேற்பை தொடர்ந்து, அவர்களது தேவைகளை கேட்டறிந்து, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.