கோவை: சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீண்டும் மருத்துவமனையில்!

0பார்த்தது
கோவை: சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீண்டும் மருத்துவமனையில்!
கோவை சூலூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக் (33) மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தினர். சிறுமி கொலை வழக்கின் குற்றவாளி என்பதை அறிந்த கைதிகள் ஆத்திரத்தில் தாக்கியதில், ஏற்கனவே இருந்த காயங்கள் மோசமடைந்தன. இதையடுத்து கார்த்திக் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி