கோவை: கொங்கு மண்டலத்தில் TMC வெற்றி இலக்கு: ஜி. கே. வாசன்

50பார்த்தது
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜி. கே. வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கொங்கு மண்டலத்தில் இருந்து TMC சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம் என ஜி. கே. வாசன் தெரிவித்தார். தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் அவர் விமர்சித்தார். மகளிர் மாதாந்திர நிதியுதவி திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், தேர்தல் சூழ்நிலையில் ரூ. 5000 அறிவிப்பு வெளியிடப்படுவது தேர்தல் நோக்கத்துடனான நடவடிக்கை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி