கோவை: ஜிபிஎஸ் பொருத்த அவகாசம் கோரி வாகன உரிமையாளர்கள் மனு

0பார்த்தது
கோவை மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம், மத்திய வட்டார போக்குவரத்து துணை ஆணையரை இன்று சந்தித்து மனு அளித்தனர். ஏப்ரல் 1 முதல் வாடகை வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்களுக்கு பிட்னஸ் சான்றிதழ் வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜிபிஎஸ் பொருத்த ரூ. 18,000க்கு மேல் வசூலிக்கப்படுவதாகவும், ஜிஎஸ்டி பில் வழங்கப்படுவதில்லை என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, ஜிபிஎஸ் பொருத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கவும், ஒரே மாதிரியான கட்டண நடைமுறையை அமல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி