கோவை: ரவுண்டானாவில் தொழிலாளர் சிலை திறப்பு!

516பார்த்தது
கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டானாவில், தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்பில், கையில் உளியுடன் தன்னைத் தானே செதுக்கும் தொழிலாளியைப் பிரதிபலிக்கும் புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர அழகுபடுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று இந்த சிலையை திறந்து வைத்தனர். கண்கவர் தோற்றமுடைய இந்த சிலை வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Job Suitcase

Jobs near you