கோவை: ரெயில் நிலையம் அருகே வாலிபர் மீது தாக்குதல்

70பார்த்தது
கோவை: ரெயில் நிலையம் அருகே வாலிபர் மீது தாக்குதல்
கோவை ரயில் நிலையம் முன்பு தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மீது மர்ம நபர் கல்லால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த லட்சுமணன் (28) என்பவர் வேலைக்காக கோவையில் தங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் ரயில் நிலையம் முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் மதுபானம் குடிக்க பணம் கேட்டதாகவும், பின்னர் கல்லால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து, செல்வபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (40) என்பவரை தேடி வருகின்றனர்.