கோவை: ஜீப் மோதி வாலிபர் பலி

77பார்த்தது
கோவை: ஜீப் மோதி வாலிபர் பலி
கோவை தடாகம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் பரத்குமார் (19). சம்பவத்தன்று இவர் லாலி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஜீப் டிரைவரான கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சாம் கிரிஸ்டு என்பவர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி