வால்பாறை அருகே வனப்பகுதியில் சிறுத்தை சடலம்.. வனத்துறை விசாரணை

739பார்த்தது
வால்பாறை அருகே வனப்பகுதியில் சிறுத்தை சடலம்.. வனத்துறை விசாரணை
வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மீன்பாறை பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், 1½ வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இறந்து கிடந்ததைக் கண்டறிந்தனர். தகவலறிந்ததும் வன அதிகாரிகள் உடலைக் கைப்பற்றி கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு செய்தனர். இரையை வேட்டையாடும் போது ஏற்பட்ட பலத்த காயங்களால் சிறுத்தை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்தது. உடல் பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் வனத்துறை முன்னிலையில் அங்கேயே எரிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி