கோவை: கோயில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

388பார்த்தது
கோவை அருகே நீலாம்பூரில் புதிதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்ட விநாயகர் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணம் கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீலாம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில், நம்பர் பிளேட் இல்லாத உயர்ரக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மர்ம நபர்களை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி