கோவை ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டம்

360பார்த்தது
கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தனியார் நிறுவனம் முட்டைகோழி பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார சீர்கேடு, துர்நாற்றம், ஈக்கள், கொசு தொல்லை, நீர் பிரச்சினை மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என அவர்கள் குற்றம் சாட்டினர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த போராட்டம் நடைபெற்றது. தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி