சூலூரில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உறவினர்கள், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இதுவரை எந்த அறிக்கையோ ஆறுதலோ தெரிவிக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான போதும் அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும், தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள சூழலிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறாதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கதறலுடன் குற்றம்சாட்டினர்.